அதிரடி சண்டைக் காட்சிகளுடன் உருவாகியுள்ள புதுப்படம் -'வீராபுரம்'

1 mins read
047ce66d-9105-43e7-905b-1b7eb69419a7
-

தமிழகத்தில் மணல் கொள்ளை அதிகரித்து வருவதாகப் பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர். இந்நிலையில், மணல் கொள் ளையை மையப்படுத்தி உருவாகிறது 'வீராபுரம்' படம். இது உண்மைச் சம்பவம் ஒன்றை மிக உருக்கத்துடன் விவரிக்கும் படைப் பாம். கூடவே ஒரு காதல் விவகாரத்தையும் முன்னிறுத்தி திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குநர் செந்தில்குமார். இதில் 'அங்காடி தெரு' மகே‌ஷும் 'உறுதிகொள்' மேகனாவும் ஜோடி சேர்ந்துள்ளனர். படத்தில் பல அதிரடி சண்டைக் காட்சிகள் உள்ளனவாம். இப்படம் வெளியான பிறகு மகே‌ஷும் அதிரடி நாயகர்களின் பட்டியலில் இடம்பெறுவது உறுதி என்கிறார் இயக்குநர் சந்திரகுமார்.