நயனுக்காக உருவாகும் பேய் வீடு

நயனுக்காக உருவாகும் பேய் வீடு

1 mins read
b2c1220a-c7a7-4057-bc50-bb1f80e80f62
-

தமிழ்த் திரையில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நயன்தாரா. தொடர்ந்து தனக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் கதையின் நாயகியாகப் பல படங்களில் நடித்து வருகிறார். இவர் தற்பொழுது 'லட்சுமி', 'மா' போன்ற குறும்படங்களை இயக்கிய சர்ஜூன் இயக்கும் ஒரு படத்தில் நடிக்கிறார். மர்மம் கலந்த பேய்க் கதையாக உருவாகும் இப்படத்திற்காகப் பேய் வீடு ஒன்று பிரம்மாண்டமாகத் தயாராகி வருகிறது. படத்தில் பேய் வீட்டிற்குள் சென்று பேயை ஆராய்ச்சி செய்யும் வேடத்தில் நடிக்கிறார் நயன்தாரா. அடுத்த மாதம் முதல் இதன் படப்பிடிப்புகள் ஆரம்பமாகின்றன. இதற்கிடையே, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மற்றொரு படத்தில் நடிக்கிறார் நயன்தாரா. இருவரும் ஏற்கெனவே 'வேலைக்காரன்' படத்தில் ஜோடியாக நடித்து இருந்தார்கள். இரண்டு பேரும் மீண்டும் இணைய இருக்கும் இந்தப் புதிய படத்திற்குப் பெயர் சூட்டப்படவில்லை. எம். ராஜேஷ் இந்தப் படத்தை இயக்குகிறார்.