பிரகாஷ்ராஜூக்கு கருணாநிதியாக நடிக்க ஆசை

பிரகாஷ்ராஜூக்கு கருணாநிதியாக நடிக்க ஆசை

1 mins read
e4ef0514-af07-44e4-9883-20d54f97a46a
-
Google News Preferred Icon

கருணாநிதியைப் போல் இனி ஒருவரைப் பார்க்கமுடியுமா என்பது சந்தேகம்தான் என்கிறார் நடிகர் பிரகாஷ்ராஜ். கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டால் அவரது கதாபாத்திரத்தில் மீண்டும் நடிக்க விரும்புவதாகவும் சொல்கிறார். மணிரத்னம் இயக்கத்தில் 'இருவர்' படத்தில் கருணாநிதி வேடத்தில் நடித்த போது பிரகாஷ்ராஜுக்கு 30 வயது தானாம். "அதற்காக நான் கருணாநிதி பற்றி நிறைய ஆய்வு செய்தேன். அவரைப் பற்றி படிக்கப் படிக்க எனக்கு அவரின் வாழ்க்கை மிகவும் பிடித்துவிட்டது. அவர் மீதான மரியாதையும் அன்பும் மேலும் அதிகரித்தது.

அவருக்கும் எம்ஜிஆருக்கும் இடையே இருந்த நட்பு குறித்து அறிந்து அசந்து போய்விட்டேன். "பல ஆண்டுகள் கழித்து ஒருவழியாக நான் கருணாநிதியை நேரில் சந்தித்தேன். நான் படத்தில் நடித்த கதாபாத்திரம் போன்று இல்லாமல் வித்தியாசமாக இருந்தார். 'இருவர்' பிடித்திருந்ததா? கொஞ்சமாவது உங்களைப் போன்று நடித்தேனா என்று நான் கருணாநிதியிடம் கேட்டேன். 'ஆமாம் கிட்டத்தட்ட' என்று அவர் கூறினார். "அதன்பிறகு நாங்கள் அடிக்கடி சந்தித்துப் பேசிக்கொண்டோம். மணிக்கணக்கில் அரசியல் பற்றி பேசுவோம்," என்கிறார் பிரகாஷ்ராஜ்.