உடல் உறுப்பு தானம் செய்த நாயகி

1 mins read
b1c62bb2-65b9-4054-acfb-0a8ee2d5c4ef
-

இப்போதெல்லாம் நடிகைகள் சமூக அக்கறையுடன் செயல்படுகிறார்கள். நடிகைகள் சமந்தா, திரிஷா போன்ற வர்கள் சத்தமில்லாமல் பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நடிகை ராதிகா ஆப்தேவும் ஒரு நல்ல காரியம் செய்துள்ளார். அண்மையில் உடல் உறுப்புகளைத் தானம் செய்துள்ளாராம். 'தோணி' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி, 'கபாலி' மூலம் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்தவர் இவர். ஏற்கெனவே மாதவிடாய் காலங்களில் பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார். அடுத்ததாக இறப்புக்குப் பிறகு மற்றவர்களுக்குப் பயன்படும் வகையில் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளார். ராதிகா ஆப்தேவின் இந்தச் செயலை சக கலைஞர்கள் பலரும் வெகுவாகப் பாராட்டி உள்ளனர்.