பா. விஜய்: பெற்றோர்தான் மாற வேண்டும்

1 mins read
dc9046ed-ea76-464a-8297-e6f13522f367
-

கருவறைக்குள் இருக்கும் பெண் குழந் தைக்குக்கூட பாதுகாப்பு இல்லாத சமூகத் தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்கிறார் பாடலாசிரியரும் நடிகருமான பா. விஜய். அந்தளவுக்கு வெறியர்கள் நிறைந்த சமூகமாக நிலைமை மாறிவிட்டது என்றும் கூறுகிறார்.

பா. விஜய் தயாரிப்பில் உருவாகி உள்ள படம் 'ஆருத்ரா'. டெல்லியில் ஓடும் பேருந் தில் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப் பட்டார் இளம்பெண் நிர்பயா. அந்தச் சம்பவம் தான் இந்தப் படம் உருவாகக் காரணமாம். பா. விஜய் நாயகனாக நடித்திருப்பதுடன் படத்தை இயக்கவும் செய்துள்ளார். ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடும் இப்படத்துக்கு வித்யாசாகர் இசையமைத்துள் ளார். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் அண்மையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பேசிய பா. விஜய், தயாரிப்பாளர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள், சவால்கள் குறித்துத் திரை உலகத்தினர் விரிவாக விவாதித்துத் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினார். "பெற்றோர்தான் தங்கள் குழந்தை களைப் பாதுகாக்க வேண்டும். அந்தக் கருத்தை இந்தப் படத்தில் அழுத்தம் திருத் தமாக தெரிவித்துள்ளோம். "ஆனால் தற்போது தமிழகத்தில் பெற்றோர் குழந்தைகளைப் பார்க்காமல் கைபேசியைப் பார்ப்பதில்தான் கவனம் செலுத்துகிறார்கள். மொத்த தமிழகமும் தலைகுனிந்தபடி, வாட்ஸ்அப் பார்த்தபடி உள்ளது. இவற்றுக்கெல்லாம் இந்தப் படத்தில் தீர்வுகளைச் சொல்லியிருக்கிறோம். "பெற்றோர் குழந்தைகளை எவ்வாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதை 'ஆருத்ரா' உணர்த்தும்," என்றார் விஜய்.