காதலரைக் கரம்பிடிக்கும் சுவாதி

காதலரைக் கரம்பிடிக்கும் சுவாதி

1 mins read
dbe77a60-72fa-4fa4-9f32-071f742ecfc4
-

'சுப்ரமணியபுரம்' சுவாதி வீட்டில் கெட்டிமேள சத்தம் கேட்க உள்ளது. விமான நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் விகாஸ் என்பவரை காதல் மணம் புரிய உள்ளார். விகாஸ் தற்போது இந்தோனேசிய தலைநகர் ஜகார்தாவில் வசித்து வருகிறார். இந்நிலையில் இருவருக்கும் இம்மாத இறுதியில் திருமணம் நடைபெற உள்ளது. இதையடுத்து நெருக்கமான உறவினர்கள், நண்பர்கள், திரையுலகத்தினரை திருமண நிகழ்வில் பங்கேற்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார் சுவாதி. திருமணத்துக்குப் பின் கணவருடன் அவர் ஜகார்தாவில் குடியேற உள்ளார். செப்டம்பர் 2ஆம் தேதி அன்று திருமண வரவேற்பு நிகழ்வு ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது. இரு வீட்டாரின் சம்மதத்துடன் இத்திருமணம் நடைபெற இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக சுவாதி எதிர்பார்த்த வாய்ப்புகள் எதுவும் சரிவர அமையவில்லை. இதையடுத்தே சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தாராம்.