'சாமி ஸ்கொயர்' செப்டம்பர் மாதத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. "மத்திய மற்றும் மாநிலத் தணிக்கைக் குழுக்களின் அனுமதி கிடைத்தவுடன் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படும். செப்டம்பர் மாதத்தைத்தான் குறி வைத்துள்ளோம்," என்று தயாரிப்பாளர் சிபு தமீன்ஸ் தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஹரி இயக்கத்தில் விக்ரம், கீர்த்தி சுரேஷ் ஜோடி சேர்ந்து நடித்துள்ள படம் இது. ஐஸ்வர்யா ராஜேஷும் மற்றொரு நாயகியாக நடித்துள்ளார். வில்லனாக பாபி சிம்ஹாவும் பிரபு, இமான் அண்ணாச்சி, உமா ரியாஸ்கான் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். முதல் பாகத்தைவிட இரண்டாம் பாகத்தில் அதிரடி சண்டைக் காட்சிகள் அதிகம் இருக்குமாம்.
செப்டம்பரில் வெளியீடு காண்கிறது விக்ரமின் 'சாமி ஸ்கொயர்'
1 mins read
-

