மாடியிலிருந்து குதித்த கதாநாயகி

மாடியிலிருந்து குதித்த கதாநாயகி

1 mins read
680d89ea-9041-4e23-bd47-b41edaeeae53
-

'அழகுக் குட்டிச் செல்லம்' படத்தில் அறிமுகமான கிரிஷா க்ரூப் தற்போது தமிழில் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதில் மும்முரமாக உள்ளார். மலையாளக் கரையோரத்தைச் சேர்ந்தவர் என்றாலும் தமிழ்ப் படங்களில் நடிப்பதில்தான் ஆர்வமாக உள்ளாராம். அம்மணியின் பூர்வீகம் கேரளா. ஆனால் பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாம் மும்பையில்தானாம். 'கோலி சோடா-2'இல் தனது நடிப்பைப் பல்வேறு தரப்பினரும் பாராட்டியது மகிழ்ச்சியையும் சினிமா மீதான ஆர்வத்தையும் அதிகரித்துள்ளது என்கிறார். "அப்படத்துக்காக மொட்டை மாடியில் இருந்து குதித்த காட் சியை மறக்கவே இயலாது. தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் 'ஏஞ்சலினா'வில் நடித்து வருகிறேன்," என்கிறார் கிரிஷா.