நட்பால் கிடைத்த நல்ல வாய்ப்பு

நட்பால் கிடைத்த நல்ல வாய்ப்பு

1 mins read
4978c246-a8f6-4622-bf97-fce86310ef92
-
Google News Preferred Icon

வங்காள மொழியில் வெற்றி பெற்ற 'பொரிசோய்' படம் மூலம் திரையுல கில் அறிமுகமானவர் மிஷ்டி. தற் போது அதர்வா நாயகனாக நடிக் கும் 'செம போத ஆகாத' படத்தில் அவருடன் இணைந்து நடித்துள்ளார். பத்ரி வெங்கடேஷ் இயக்கும் படம் இது. "வங்காள மொழியில் என்னை அறிமுகப்படுத்திய இயக்குநர் ரூபாலி குகாவும் பத்ரி வெங்கடேசும் நல்ல நண்பர்கள். அந்த நட்புதான் தமிழ்த் திரையுலகில் என்னை அறிமுகப்படுத்தியது. "ரூபாலி என்னைப் பற்றி பத்ரி யிடம் கூறியுள்ளார். அதன் பிறகு எனது முதல் படத்தைப் பார்த்த பத்ரி திருப்தியடைந்து தமிழுக்கு அழைத்து வந்துள்ளார்," என்று சொல்லும் மிஷ்டி மேற்கு வங்கா ளத்தைச் சேர்ந்தவர். தமிழுக்கு முன்பே இந்தியில் நடித்துள்ளார். "தமிழிலும் சாதிப்பேன்," என்கிறார் மிஷ்டி.