அடிதடி, குத்துப்பாட்டு, படுவேகமான திரைக்கதை என தெலுங்குப் படங்களுக்கே உரிய அம்சங்களை ஒதுக்கி வைத்துவிட்டு வெளியாகி வெற்றிகண்ட 'சீத்தம்மா வாகித்யோ சிரிமல்லே செட்டு' படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்துள்ளனர். 'நெஞ்சமெல் லாம் பல வண்ணம்' என்ற தலைப்பில் வெளியாகி உள்ள இப்படத்தில் மகேஷ் பாபு, வெங்கடேஷ் நாயகர்களாகவும், அஞ்சலி, சமந்தா நாயகிகளாகவும் நடித்துள்ளனர். "குடும்ப உணர்வுகளை, உறவுகளை பின்னிப்பிணைத்து உருவாக்கப்பட்டுள்ள கதை இது. வெங்கடேஷ், மகேஷ் பாபு இருவரும் சகோதரர்களாக நடித்துள்ளனர். மிக முக்கிய கதாபாத்திரத்தில் பிரகாஷ் ராஜ் நடித்துள்ளார். தமிழ் ரசிகர்களையும் இப்படம் கவரும் என நம்புகிறோம்," என்கிறார் இயக்குநர் ஸ்ரீகாந்த். இப்படம் விரைவில் திரைகாண உள்ளது.
'நெஞ்சமெல்லாம் பல வண்ணம்' - தெலுங்குப் படத்தின் மறுபதிப்பு
1 mins read
-

