முதல்வர் மனைவி வேடத்தில் மஞ்சிமா

முதல்வர் மனைவி வேடத்தில் மஞ்சிமா

1 mins read
f989e813-b3c4-4cbd-9d49-73696c839dc7
-
Google News Preferred Icon

மறைந்த ஆந்திர முதல்வர் என்.டி. ராமாராவின் வாழ்க்கை வரலாற்றுப் படம் தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளில் உருவாகிறது. இதில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கதாபாத்திரத்தில் நடிக்கிறார் 'பாகுபலி' புகழ் ராணா டகுபதி. இந்நிலையில் இவரது மனைவி கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை மஞ்சிமா மோகனுடன் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பெரும் பொருட்செலவில் பிரமாண்ட மாக உருவாகவுள்ள இப்படத்தில் நடிக்க வேண்டும் என்று மஞ்சிமாவும் ஆர்வமாக உள்ளாராம். அவர் ஒப்பந்தமாகும் பட்சத்தில் இது தெலுங்கில் அவருக்கு இரண்டாவது படமாக அமையும். ஏற்கெனவே 'அச்சம் என்பது மடமையடா'வின் தெலுங்கு பதிப்பில் நடித்துள்ளார் மஞ்சிமா. இப்போது தமிழில் கௌதம் கார்த்திக்குடன் 'தேவராட்டம்' படத்தில் நடித்துக் கொண்டிக்கிறார்.