பிடிக்காததை தவிர்க்கிறேன் - மடோனா

பிடிக்காததை தவிர்க்கிறேன் - மடோனா

1 mins read
902566cc-4021-47f2-b83d-1fade1f4396e
-

நடித்தால் நாயகியாக மட்டுமே நடிப்பேன் என நடிகைகள் பிடிவாதம் பிடித்த காலமெல்லாம் மலையேறி விட்டது. இப்போதெல்லாம் எத்த கைய வேடமாக இருந்தாலும் பரவாயில்லை எனும் முடிவுடன் பல இளம் நாயகிகள் களம் இறங்கியுள்ளனர். ரசிகர்களைக் கவர வேண்டும், நல்ல நடிகை எனப் பெயரெடுக்க வேண்டும் என்பது மட்டுமே இளம் நாயகிகளின் விருப்பமாக உள்ளது. அந்த வகையில் வில்லியாக நடிக்கத் தயார் என்கிறார் நடிகை மடோனா சபாஸ்டியன். ஒரே மாதிரியான கதாபாத்திரங்களை ஏற்பதில் தமக்கு அறவே விருப்பமில்லை என்கிறார். ஒருசில படங்களில் மட்டுமே ந டி த் தி ரு ந் தா லு ம் மடோனாவுக்கு தமிழ், மலையாளத் திரை ரசிகர்கள் மத்தியில் தனி இடம் கிடைத்தி ருக்கிறது.

அண்மையில் வெளி வந்த 'ஜுங்கா' படத்தில் சிறிது நேரமே வந்தாலும் அவ ரது நடிப்பு விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. "ஒரே மாதிரியான வேடங் களை ஏற்பதை அறவே தவிர்த்து விடுகிறேன். குடும்பத் துடன் அதிக நேரத்தைச் செலவிட முடியாமலும் மற்ற விருப்பங்களில் கவனம் செலுத்த முடியாமலும், முழுக்க முழுக்க சினிமாவுக்கு மட்டுமே நேரத்தை ஒதுக்குகிறோம். "அப்படிப்பட்ட எங்களுக்கு என்ன நோக்கம் இருந்துவிடப் போகிறது. நல்ல படங்கள், கதாபாத்திரங்கள் அமைய வேண்டும் என்பது மட்டுமே எங்களின் எதிர்பார்ப்பு. "தற்போது எந்த மாதிரியான படங்களில் நடிக்க வேண்டும் என்பதை ஓரளவு புரிந்து வைத்துள்ளேன். வில்லத்தனமான வேடங்களில் நடிக்க வேண்டும் என ஆசையாக உள்ளது," என்கிறார் மடோனா.