'வட சென்னை' படத்தில் உயிரைக் கொடுத்து நடித்துள்ள தனுஷ்

'வட சென்னை' படத்தில் உயிரைக் கொடுத்து நடித்துள்ள தனுஷ்

1 mins read
0ddc277e-5e27-4c25-ad17-b1647de15d2b
-

'வட சென்னை' படக்காட்சியில் தனு‌ஷுடன் ஐஸ்வர்யா ராஜேஷ். தனு‌ஷின் அண்மைகால படங்கள் சரியாக போகாததால் அவர் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகவுள்ள படங்களை அவரது ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்த்துள்ளனர். இதை மனதில் வைத்து 'வட சென்னை', 'மாரி 2', 'எனை நோக்கி பாயும் தோட்டா' ஆகிய படங்களில் உயிரைக் கொடுத்து நடித்துள்ளதாக தனுஷ் கூறியுள்ளார். அதிலும், வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியாகவுள்ள 'வட சென்னை' படத்துக்கு ரொம்பவே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. வட சென்னையைச் சேர்ந்த தாதா ஒருவரின் 30 ஆண்டுகால வாழ்க்கையைப் பற்றி இந்தப் படம் பேசுகிறதாம். இந்தப் படத்துக்காக தனுஷ் 200 நாட்கள் கால்‌ஷீட் ஒதுக்கியதாகவும் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடப்பதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது. அடுத்த மாதம் படம் வெளியாகும்.