ரைசா: திறமையை வெளிப்படுத்துவேன்

ரைசா: திறமையை வெளிப்படுத்துவேன்

1 mins read
fcc20236-daaf-4a9f-a3ca-d461cef00656
-

'பிக்பாஸ்' மூலம் பிலபமாகி, பின்னர் 'பியார் பிரேமா காதல்' படத்தில் நாயகியாக நடித்தார் ரைசா. இப்படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதையடுத்து அவரைத் தேடி புதிய வாய்ப்புகள் வருகின்றனவாம். தற்போது பாலா இயக்கும் 'வர்மா' படத்தில் நடிக்கும் ரைசா தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். "பாலா படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காதா எனப் பலரும் காத்திருப்பார்கள். எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. "இப்படத்தில் எனக்கு மிகவும் அழுத்தமான கதாபாத்திரத்தை அளித்துள்ளார் பாலா. இதில் எனது திறமையை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் இடம்பிடிப்பேன். "தொடக்கத்தில் இயக்குநர் பாலாவை பார்க்கும் போது சற்றே பயமாகவே இருந்தது. அவர் எனது காட்சிகளை பொறுமையாக விளக்கி, எப்படி நடிக்க வேண்டும் என்றும் படிப்படியாகக் கற்றுக்கொடுத்தார். பின்னர் பயம் நீங்கி சகஜமாக நடித்தேன்," என்கிறார் ரைசா.