நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழ்ப் படத்தில் நடிக்க உள்ளார் டாப்சி. 'ஆடுகளம்' மூலம் கோடம்பாக் கத்தில் கால்பதித்த இவர் மளமள வென சில படங்களில் நடித்தார். அதன்பிறகு இந்திக்குச் சென்றவர் தமிழ்ப் படம் பக்கம் எட்டிப் பார்க்கவே இல்லை. தற்போது நான்கு இந்திப் படங் களில் நடித்துக் கொண்டிருக்கிறா ராம். இந்நிலையில் தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற 'ஆர்எக்ஸ்-100' படத்தைத் தமிழில் மறுபதிப்பு செய்கின்றனர். இதில் ஆதி நாயகனாக நடிக்கிறார். இந்நிலையில் கதாநாயகியாக டாப்சியை ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அவர் அதிக சம்பளம் கேட்பதால் முதலில் தயங்கிய தயாரிப்பு தரப்பு, தற்போது அவரை ஒப்பந்தம் செய்வதற்கு முன்வந்துள்ளது.
மீண்டும் தமிழுக்கு வருகிறார் டாப்சி
1 mins read
-

