ஊரைச் சுற்றிக்காட்டிய ரகுல் பிரீத் சிங்

ஊரைச் சுற்றிக்காட்டிய ரகுல் பிரீத் சிங்

1 mins read
e9ec0908-b73c-4edd-a8ea-b510e97b915e
-

தன் பெற்றோருக்கு உக்ரைன் நாட்டைச் சுற்றிக் காட்டியுள்ளார் இளம் நாயகி ரகுல் பிரீத் சிங். தற்போது கார்த்தியுடன் 'தேவ்' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் ரகுல். இதன் படப்பிடிப்பு அண்மையில் உக்ரைனில் நடைபெற்றது. இதற்காக தனது பெற்றோரையும் உடன் அழைத்துச் சென்றாராம். படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் பெற்றோருடன் உக்ரைனைச் சுற்றி வந்துள்ளார். "இருவருக்கும் ஊரைச் சுற்றிக் காட்டியபோது கிடைத்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஏற்கெனவே ஒரு தெலுங்குப் படத்துக்காக உக்ரைன் சென்றிருந்தேன். அதனால் அங்குள்ள அத்தனை இடங்களும் எனக்கு அத்துப்படி. அதனால்தான் முன்கூட்டியே நன்கு திட்டமிட்டு பெற்றோரை அழைத்துச் சென்றேன்," என்கிறார் ரகுல். இவர் தற்போது சூர்யாவுடன் 'என்ஜிகே' படத்திலும் நடித்துக்கொண்டிருக்கிறார்.