கேரளாவில் வெள்ளத்தில் சிக்கித் தவிப்பவர்களுக்கு திரையுலகத்தினர் நிதியளித்து வருகின்றனர். இந்நிலையில் இளம் நாயகன் அபி சரவணன் நேரடியாக அங்கு சென்று நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளார். வயநாடு, குட்டநாடு பகுதிகளில் தனது சகாக்களுடன் முகாமிட்ட அவர், கேரளா நோக்கிச் செல்லும்போதே வழியில் ஈரோட்டில் போர்வைகள், அத்தியாவசிய ஆடைகள், குழந்தைகளுக்கான உடுப்புகள், சமையல் பொருட்கள், மருந்து மாத்திரைகள் என பல்வேறு நிவாரணப் பொருட்களையும் வாங்கியுள்ளார். பிறகு வயநாடு பகுதி எம்எல்ஏவைத் தொடர்புகொண்டு, ஆட்சியரின் வழிகாட்டுதல்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளார். சுமார் 500 குடும்பங்களைச் சேர்ந்த 2,000 பேருக்கு இவர் கைகொடுத்துள்ளார்.
நேரடியாக நிவாரணப் பொருட்களை விநியோகித்த இளம் நாயகன்
1 mins read
-

