விழிப்புணர்வுப் படத்தில் நடிக்கும் சிவா

விழிப்புணர்வுப் படத்தில் நடிக்கும் சிவா

1 mins read
b4932dae-0438-4ffb-ad07-15dbec31a3a0
-
Google News Preferred Icon

பள்ளி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஆவணப்படம் ஒன்றில் நடித்துள்ளார் சிவகார்த்திகேயன். இயக்குநர் திரு இயக்கும் இந்த ஆவணப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இது தொடர்பான புகைப்படம் ஒன்றை அவர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். "சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஓர் ஆவணப் படத்தில் பணிபுரிந்து வருகிறேன். ஒரு நல்ல காரியத்துக்காக இருவரும் இணைந்துள்ளோம். இதுகுறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும்," என அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார் இயக்குநர் திரு. இதற்கிடையே பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி உள்ள 'கனா' படத்தின் பாடல்களை இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா வெளியிட இருப்பதாக சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். அருண்ராஜ் காமராஜ் இயக்கும் இந்தப் படத்தை தயாரிப்பது இவர் தான். இப்படம் இளையர்களை வெகுவாகக் கவரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் சிவா.