வசூலில் அசத்தும் 'கோலமாவு கோகிலா'

வசூலில் அசத்தும் 'கோலமாவு கோகிலா'

1 mins read
de0e7592-0e55-4ab7-8e13-a073f3346ff5
-

அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது 'கோலமாவு கோகிலா'. படம் வெளியான முதல் நாளன்றே மூன்று கோடி ரூபாய் வசூலித்து அசத்தியுள்ளது. இதனால் இப்படக் குழுவினர் உற்சாகத்தில் மிதக்கும் நிலையில், மற்றொரு இன்ப அதிர்ச்சியாக ரஜினிகாந்தும் இப்படத்தைப் பாராட்டி உள்ளார். இப்படத்தின் இயக்குநர் நெல்சனை தொடர்புகொண்ட ரஜினி, சிரித்தபடியே படத்தைப் பார்த்து ரசித்ததாக தெரிவித்துள்ளார். அவரது இந்தப் பாராட்டு உற்சாகத்தையும் தன்னம்பிக்கையையும் அதிகரித்து இருப்பதாக நெல்சன் தெரிவித்துள்ளார். 'கோலமாவு கோகிலா' வசூலில் அசத்தும் என்கிறார்கள் கோடம்பாக்கத்து விவரப் புள்ளிகள்.