70 லட்சம் ரூபாய் நிதி அளித்த விஜய்

70 லட்சம் ரூபாய் நிதி அளித்த விஜய்

1 mins read
c76674ed-2e4d-4e4d-8d0d-54fb9978cef3
-

அனைத்துலக அளவில் சிறந்த நடிகராகத் தேர்வு பெறக்கூடிய வாய்ப்பு விஜய்க்கு வாய்த்துள்ளது. 'ஐஏஆர்ஏ' என்ற பெயரில் ஒவ்வோர் ஆண்டும் உலகளவில் சிறந்த நடிகருக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இவ்விருதுக் கான வாக்கெடுப்பும் இணையம் வழி நடைபெற்றது. உலகளவில் பல நடிகர்கள் கலந்துகொண்ட இந்தப் போட்டியில் இறுதிப் பட்டியல் இரு தினங்களுக்கு முன் வெளியானது. இதில் நடிகர் விஜய், கென்னத் ஓ கோலி, டைம் ஹசன், ஜோஷ்வா ஜாக்சன் ஆகிய நால்வரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இச்செய்தியை வாசகர்கள் படிக்கும் நேரத்தில் வெற்றியாளர் பெயர் அறிவிக்கப்பட்டிருக்கும். இதற்கிடையே கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர் களுக்கு ரூ.70 லட்சம் நிதி அளித்துள்ளார் விஜய். இவரது ரசிகர் களும் கேரளாவில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருப்ப தாகத் தகவல்.