'ஊர காணோம்'

'ஊர காணோம்'

1 mins read
bca3635a-130c-457e-95da-0891d1476f06
-

உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி வருகிறது 'ஊர காணோம்'. கே.எஸ். சரவணகுமார் தயாரிக்கிறார். இப்படத்தின் மூலம் சந்திரா சத்யராஜ் என்ற பெண் இசையமைப்பாளரை அறிமுகம் செய்கிறார்கள். மேற்கு தொடர்ச்சி மலைக்கிராமத்தில் நடந்த உண்மைச் சம்பவத்தைப் படமாக்கியிருப்பதாகச் சொல்கிறார் இயக்குநர் ஆர்.ஏ.ஆனந்த். "ஒரு காதல் ஜோடிக்கு ஏற்பட்ட நிலையை இப்படத்தில் விவரித்திருக்கிறோம். இதில் அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் பல இடம்பெற்றிருக்கும்.

மலைக்கிராமம் ஒன்றில் பனிப்பொழிவுக்கு மத்தியில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. பெண் இசையமைப்பாளரை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி. பாடல்களையும் கூட பிரியா கிருஷ்ணன், பரிமளாதேவி என்ற இரு பெண் கவிஞர்கள்தான் எழுதி உள்ளனர். பிர்லா நாயகனாகவும் பவித்ரா நாயகியாகவும் நடித்துள்ளனர். ஒவ்வொரு காட்சியும் படம் பார்க்கும் ரசிகர்களின் மனதில் ஆழமாகப் பதியும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. எனவே ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும். படம் விரைவில் திரை காணும்," என்கிறார் இயக்குநர் ஆனந்த்.