திரைத்துறையில் நடிகைகள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்படுகின்றனர் என்பதை மறுக்க இயலாது என்கிறார் இளம் நாயகி பிரியா பவானி சங்கர். அனைத்துத் துறைகளிலும் பாலியல் வன்முறைகளும் துன் புறுத்தல்களும் இருப்பதையும் ஏற்கத்தான் வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். "திரைத்துறையில் தாம் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாக நடிகை ஸ்ரீரெட்டி வெளிப்படையாகக் கூறியிருக்கிறார்.
"ஒரு தவற்றைச் செய்துவிட்டு அதை வெளிப்படையாகக் கூறு வது ஏற்புடையதல்ல. எனவே, ஸ்ரீரெட்டி செய்வது சரியல்ல," என்று பிரியா பவானி சங்கர் கூறியுள்ளார். குடும்பப் பாங்கான கதா பாத்திரங்களை மட்டுமே ஏற்று நடிக்கப் போவதாகவும், அத்த கைய வாய்ப்புகள் தேடி வருவ தாகவும் அவர் மேலும் தெரி வித்துள்ளார்.

