தமிழ் ஆசிரியையாக மாறிய நந்திதா

தமிழ் ஆசிரியையாக மாறிய நந்திதா

1 mins read
c0ba4b0b-c605-481d-bc28-17eb23ee375d
-
Google News Preferred Icon

தமிழ் தெரியாத கதாநாயகனுக்கு வசனம் கற்றுக் கொடுத்ததுடன் மொழியையும் கற்றுத் தரும் ஆசிரியையாக மாறியுள்ளார் நந்திதா. இவர் தற்போது நடிக்கும் படம் '7'. ஏழு முக்கிய கதாபாத்திரங்களைச் சுற்றி நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து திகில் படமாக உருவாகிறது. பட நாயகன் ஹரிசுக்கு தமிழ் தெரியாதாம். கன்னட நடிகை என்றாலும் நந்திதாவுக்கு தமிழ் நன்றாகத் தெரியும். எனவே ஹரிசுக்குத் தமிழ் வசனங்களைக் கற்றுத் தருமாறு இயக்குநர் கேட்டுக் கொண்டாராம். இதையடுத்து நந்திதாவே ஆசிரியையாக மாறி நாயகனுக்கு வசனத்துடன் தமிழ் மொழியையும் முடிந்தவரை கற்றுக் கொடுத்தாராம். தனக்கு மிகப் பொறுமையாக தமிழில் பேசக் கற்றுக் கொடுத்ததாக நந்திதாவைப் பாராட்டுகிறார் ஹரிஸ்.