'கலாசல்'

1 mins read
928016f4-ef3c-4459-8d06-ac9b24284892
-

நடிகை அம்பிகாவின் மகன் ராம்கேசவ் நாயகனாக நடிக்கும் படம் 'கலாசல்'. இதில் நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் ஜோவிதா நாயகியாக அறிமுகமாகிறார். அஸ்வின் மாதவன் இயக்கும் இந்தப் படத்தைக் கலைத்தாய் பட நிறுவனம் சார்பில் பி.சி. பாலு தயாரிக்கிறார். ராதாரவி, அம்பிகா, முருகதாஸ், மதன்பாப், அபிஷேக், பானுசந்தர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். "திரைத்துறையில் பல சாதனைகளைப் புரிந்தவர் அம்பிகா. அதேபோல் இயக்குநர், நடிகர், கதாசிரியர் எனப் பல அவதாரங்களை எடுத்தவர் லிவிங்ஸ்டன். இவர்கள் இருவரது வாரிசுகளையும் வைத்துப் படம் இயக்குவதில் மகிழ்ச்சி. இது அனைத்துத் தரப்பு ரசிகர்களுக்கும் பிடித்த படமாக உருவாகி வருகிறது," என்கிறார் அஸ்வின் மாதவன். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றுக்கும் இவர் தான் பொறுப்பேற்றுள்ளார். நிஜாமுதீன் இசையமைக்க குமார் ஒளிப்பதிவைக் கவனிக்கிறார். பழனியில் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கொடைக்கானல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.