மீண்டும் இணைந்த அனுஷ்கா - மாதவன்

மீண்டும் இணைந்த அனுஷ்கா - மாதவன்

1 mins read
a3ff119b-eefa-4d62-9a27-ceeaa20452e8
-

12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மாதவனுக்கு ஜோடியாகி உள்ளார் அனுஷ்கா. இருவரும் சுந்தர் சி. இயக்கத்தில் 'ரெண்டு' படத்தில் நடித்துள்ளனர். கடந்த 2006ஆம் ஆண்டு இப்படம் வெளியானது. இந்நிலையில் ஹேமந்த் மதுக்கர் இயக்கும் 'சைலண்ட்' படத்தில் இருவரும் ஒப்பந்தமாகி உள்ளனர். பிரபல தெலுங்கு திரைக்கதை ஆசிரியர் கோனா வெங்கட் இப்படத்தைத் தயாரிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளது. ஹாலிவுட் கலைஞர்களும் இதில் பங்கேற்க உள்ளதாகத் தகவல். மீண்டும் மாதவனோடு இணைந்து நடிப்பதில் மகிழ்ச்சி என்கிறார் அனுஷ்கா. இப்படம் வித்தியாசமான காதல் கதையுடன் உருவாகிறதாம்.