'8 பேக்ஸ்' உடல்கட்டுடன் அறிமுகமாகும் ஆதவா

'8 பேக்ஸ்' உடல்கட்டுடன் அறிமுகமாகும் ஆதவா

1 mins read
70ea5eb6-f443-4984-95e9-d12930dec45e
-

புதியவர்கள் இணைந்து உருவாக்கி உள்ள படம் 'இராஜாவின் பார்வை இராணியின் பக்கம்'. விகாஷ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் விகாஷ் ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார். இதில் ஆதவா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். முதல் படத்திலேயே 8 பேக் வைத்து நடித்திருக்கிறார். மலையாள நடிகை அவந்திகா நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் மதுமிதா, கானா உலகநாதன், சிங்கப்பூர் தீபன் நடித்துள்ளனர். "தன்னை ஏமாற்றிய காதலியைப் பழிவாங்க ஒரு பெரிய தாதாவின் உதவியை நாடிச்செல்கிறார் நாயகன். அதன்பின் நடக்கும் விஷயங்களை நகைச்சுவையாகச் சொல்கிறோம். கிளைமாக்ஸ் காட்சி யாரும் ஊகிக்கமுடியாத ஒன்றாக இருக்கும்.

கதைப்படி படத்தில் நாயகன் 6 பேக்ஸ் உடல்கட்டுடன் இருக்கவேண்டும். ஆனால் ஆதவா 4 மாதம் கடும் பயிற்சி எடுத்து 8 பேக்குடன் வந்து நிற்கிறார். முன்னணி நாயகன்களுக்குச் சவால்விடும் வகையில் சண்டைக் காட்சி களில் நடித்துள்ளார். இம்மாதம் 7ஆம் தேதி வெளியாக உள்ள இந்தப் படம் நிச்சயம் ஒரு மறக்க முடியாத காமெடி அனுபவத்தை ரசிகர்களுக்குத் தரும்," என்கிறார் இயக்குநர் அழகுராஜா.