யோகிபாபு நடிக்கிறார் என்றாலே ஒரு படத்தின் வியாபாரம் சுல பத்தில் நடந்துவிடுகிறது. தற் போது 'சண்டிமுனி' என்ற படத் தில் ஒப்பந்தமாகியுள்ளார் யோகி. இதில் நட்ராஜ், மணிஷா நாயகன், நாயகியாக நடிக்கின்றனர். இது நகைச்சுவையும் திகிலும் கலந்த படமாக உருவாகிறதாம். இளம் பெண்ணுக்கும் ஒரு பேய்க்கும் இடையே நடக்கும் மோதல்களால் நாயகனும் அவரது நண்பரும் படாத பாடு படுகிறார்கள் என்பதே கதை. இந்நிலையில் இப்படத்தின் புகைப் படங்களை வெளியிட்டுள்ளனர். ரசிகர்கள் இவற்றைப் பரவலாகப் பகிர்ந்துவருவதால் எடுத்த எடுப் பிலேயே இப்படம் குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.
யோகிபாபு முக்கிய வேடத்தில் நடிக்கும் 'சண்டிமுனி'
1 mins read
-

