பெண் இயக்குநர் படத்தில் சமந்தா

பெண் இயக்குநர் படத்தில் சமந்தா

1 mins read
b5f31eb3-5668-44da-b77d-2b400bdea5d1
-

திருமணத்துக்குப் பிறகு சமந்தாவுக்கு நல்ல நேரம் தொடங்கிவிட்டது போலும். அவர் நடிக்கும் படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்று வருகின்றன. இந்நிலையில் பெண் இயக்குநர் பி.வி. நந்தினி இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் சமந்தா. இவர் தெலுங்கில் வெளியான 'ஜபார்தஸ்த்' படத்தை இயக்கியவர். அண்மையில் சமந்தாவைச் சந்தித்து தான் எழுதியுள்ள கதையை விவரித்தாராம் நந்தினி. சுவாரசியமான திரைக்கதை மனதைக் கவரவே உடனடியாக கால்‌ஷீட் ஒதுக்கிவிட்டாராம். இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இதற்கிடையே சமந்தா நடிப்பில் தமிழில் 'சூப்பர் டீலக்ஸ்' அடுத்து வெளியாக உள்ளது. இதில் விஜய் சேதுபதி நாயகன். இந்நிலையில் தெலுங்கில் கணவர் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார் சமந்தா.