'பவர்பாண்டி' படத்தை அடுத்து நாகார்ஜுனா, சரத்குமார், எஸ்.ஜே.சூர்யா, அதிதி ராவ் எனப் பல முன்னணி நடிகர் நடிகைகளை வைத்து தனது இரண்டாவது படத்தை இயக்கி வருகிறார் நடிகர் தனுஷ். இந்த சரித்திரப் படம் 600 ஆண்டுகளுக்கு முந்தைய கதையில் உருவாகி வருகிறது. திருநெல்வேலி மண்வாசனை கதையில் தயாராகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்ற நிலையில், அடுத்தபடியாக தமிழகத்திலுள்ள ஒரு முக்கிய கிராமத்தில் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடக்கிறது. இந்நிலையில், இந்தப் படத்தில் நாயகியாக நடிக்கும் அதிதி ராவ், தனுஷின் இயக்கம் குறித்து ஒரு தகவல் வெளி யிட்டுள்ளார். அவர் கூறுகையில், ஏற்கெனவே தனுசுடன் ஒரு படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. கால்ஷீட் பிரச்சினையால் நடிக்க முடியவில்லை. இப்போது அவர் இயக்கும் மிகப் பெரிய பட்ஜெட் படத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. தனுஷ் காட்சி வைப்பதே புதுமையாக இருக்கிறது. அதோடு, காட்சிகளை அவர் விளக்கி வேலை வாங்குவது மிகவும் திருப்தி கரமாக உள்ளது. அந்த வகையில் ஓர் இயக்குநராக என்னைக் கவர்ந்துவிட்டார் தனுஷ்," என்றார் அதிதி.
தனுஷைப் புகழும் அதிதி ராவ்
1 mins read
-

