'செக்க சிவந்த வானம்' தமிழ்நாட்டில் மட்டும் சுமார் ரூ.7 கோடி வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. 'செக்க சிவந்த வானம்'. இப்படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய், பிரகாஷ் ராஜ், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், ஜெயசுதா, டயானா உள்ளிட்ட ஒரு ந ட் ச த் தி ர ப் பட்டாளமே நடித்துள்ளனர். ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று முன்தினம் வெளியான இந்தத் திரைப்படம் விமர்சகர்களிடமும் ரசிகர்களிடமும் நல்ல பாராட்டைப் பெற்று வருகிறது. மேலும் படத்தில் அனைத்து நாயகர்களுக்கும் சமமான கதாபாத்திரம் கொடுக்கப் பட்டுள்ளதால் அனைத்து ரசிகர் களும் படத்தை ரசித்து வருகின்றனர்.
இந்நிலையில் இப்படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட் தற்போது வெளியாகி யுள்ளது. 'செக்க சிவந்த வானம்' சென்னையில் மட்டும் ரூ.89 லட்சம் வசூலித்துள்ளதாகவும் தமிழ்நாடு மொத்தமும் சுமார் ரூ.7 கோடி வசூலித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுதவிர அமெரிக்காவில் ரூ.1.6 கோடி வசூலித்துள்ளது. இந்த ஆண்டில் விடுமுறை தினத்தில் வெளிவந்த படங்களில் அதிக வசூல் ஈட்டிய படமாக 'செக்க சிவந்த வானம்' உள்ளது. மேலும் செவ்வாய்க்கிழமை காந்தி ஜெயந்தி என்பதால் அடுத்த 5 நாட்களில் படம் அதிக வசூல் ஈட்டக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

