நயன்தாரா, திரிஷா, சமந்தா போன்ற முன்னணி கதாநாயகிகள் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்கள். அவர்களால் விடப்பட்ட காலி இடத்தை கீர்த்தி சுரேஷ் லாவகமாக கைப்பற்றிக்கொண்டார். அதனால் அவருக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்து வரவு அதிகமாகிக்கொண்டே போகிறது. இதுவரை அவர் சென்னை அரும்பாக்கத்தில் வசித்து வந்தார். கிழக்குக் கடற்கரைச் சாலையில் அவர், ஓர் ஆடம்பர பங்களாவைக் கட்டி வந்தார். கட்டடம் கட்டும் பணி முடிவடைந்த நிலையில் கீர்த்திச் சுரேஷ் அரும்பாக்கம் வீட்டை காலி செய்துவிட்டு, கிழக்குக் கடற்கரைச் சாலையில் கட்டிய புது பங்களாவுக்குக் குடிபோயிருக்கிறார். காற்றுள்ளபோதே தூற்றிக்கொண்டுவிட்டார் கீர்த்திச் சுரேஷ்.
புதுவீட்டில் குடியேறினார் கீர்த்தி சுரேஷ்
1 mins read
-

