தமிழில் நடிக்க விரும்பும் கேத்தரின்

தமிழில் நடிக்க விரும்பும் கேத்தரின்

1 mins read
71b4f303-26c2-4007-a9f5-8aa07e3ab6f6
-

நடிகை கேத்தரின் தெரேசாவைத் திடீரென கோடம்பாக்க வட்டாரங்களில் காண முடிவதில்லை. அவர் தெலுங்கில் நிறைய படங் களில் நடித்து வருவ தாகக் கூறப்பட்டது. ஆனால் அவருக்கோ தமிழில் நடிக்க வேண்டும் என்பதில்தான் அதீத விருப்பமாம். இந்நிலையில் சுந்தர் சி. இயக்கும் அடுத்த படத்தில் கேத்தரின் ஒப்பந்தமாகி உள்ளார். கதைப்படி இதில் இரண்டு நாயகிகளாம். ஏற்கெனவே மேகா ஆகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தெலுங்கில் பெரும் வர வேற்பைப் பெற்ற 'அத்தி ரெண்டிகி தாரேதி' படத்தைத் தமிழில் மறுபதிப்புச் செய்கிறார் சுந்தர் சி. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் சிம்புதான் கதாநாயகன். தெலுங்கில் பிரணிதா நடித்த வேடத்தில்தான் கேத்தரினை ஒப்பந்தம் செய்துள்ளனர். "ஜார்ஜியாவில் முதல்கட்டப் படப்பிடிப்பை முடித்துவிட்டு படக்குழு சென்னை திரும்பியுள்ளது. அடுத்து ஐதராபாத்தில் எனக்கும் சிம்புவுக்குமான காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. மீண்டும் தமிழில் நடிப்பது உற்சாகமளிக்கிறது," என்கிறார் கேத்தரின் தெரேசா.