கீர்த்தி: முதலிடம் பற்றி கவலை இல்லை

கீர்த்தி: முதலிடம் பற்றி கவலை இல்லை

2 mins read
82cabb12-3253-47cb-8673-ee8d5b1136fb
-

'சர்க்கார்' படத்தின் வெளியீட்டை ரசிகர்களை விட கீர்த்தி சுரேஷ் வெகுவாக எதிர்பார்த்துக் காத்திருக்கிறார். விஜய்யைப் பற்றிப் பேசத் தொடங்கினால் வாய் மூடுவதற்கு குறைந்தது அரை மணி நேரமாகிறது. அந்தளவு பாராட்டித் தள்ளுகிறார். "நான் மிகவும் மதிக்கக்கூடிய, ரசிக்கக்கூடிய மனிதர்களில் அவரும் ஒருவர். முதன்முதலாக நான் அதிக பொருட்செலவில் நடித்த 'பைரவா' படத்தின் நாயகன். அதில் நான் நடிப்பதற்கு விஜய்தான் காரணம். மீண்டும் அவருடன் ஜோடி சேர்ந்துள்ளேன். இதற்காக விஜய் சாருக்கு சிறப்பு நன்றி. "'சர்க்கார்' படத்தைத் தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தார், இயக்குநர் முருகதாஸ், ஏ.ஆர். ரகுமான் சார் எனப் பலரும் இணைந்திருப்பதால் இது பிரம்மாண்ட தயாரிப்பாக உருவாகி உள்ளது.

இப்படைப்பில் நானும் இருக்கிறேன் என்பதே எனக்குப் பெருமைதான்," என்கிறார் கீர்த்தி. தற்போது தமிழ் தவிர இதர தென்னிந்திய மொழிகளிலும் நடிக்கக் கேட்டு ஏராளமான வாய்ப்புகள் தேடி வருகின்றனவாம். கிட்டத்தட்ட தென்னிந்தியாவின் முதன்மை நடிகை எனும் இலக்கு நோக்கி அவர் வேகமாகச் சென்றுகொண்டிருப் பதாகத் திரை விமர்சகர்கள் கூறுகின்றனர். ஆனால் முதலிடம், கடைசி இடம் என்பது குறித்தெல்லாம் தாம் அறவே கவலைப்படவில்லை என்கிறார் கீர்த்தி. "எல்லா மொழிப் படங்களுமே என் மனதுக்கு நெருக்கமானவைதான். நான் நடிக்கும் படங்களுக்கான கதைகளை நானே கேட்கிறேன். படம் வெளியாகும் போது முதல் நாளன்றே திரையரங்குக்குச் சென்று ரசிகர்க ளுடன் ஒன்றாக அமர்ந்து முதல் காட்சியைப் பார்க்கிறேன்.

"சில நாட்கள் இடைவெளி விட்டு மீண்டும் அதே படத்தை இன்னொரு திரையரங்கத்தில் பார்ப்பதுண்டு. இதன் மூலம் ஒவ்வொரு படத்துக்கும் கிடைக்கும் வரவேற்பு, விமர்சனம் எப்படிப்பட்டதாக இருக்கின்றன என்பதை உணர முடிகிறது," என்கிறார் கீர்த்தி. இப்படி ஓர் ஆலோசனையை வழங்கியது இவரது தந்தைதானாம். முதல் படத்தில் நடித்த போது அவர் கூறிய இந்த அறிவுரையை இன்றுவரை பின்பற்றி வருகிறார். கீர்த்தி ஆடை வடிவமைப்பில் கெட்டிக் காரராம். சினிமாவுக்கு வரவில்லை என்றால் சிறந்த வடிவமைப்பாளராக உருவாகி இருப்பாராம். "ஆடை வடிவமைப்பு தொடர்பாக படித்துள் ளேன். ஆனால் சினிமாவுக்கு வந்துவிட்டதால் எங்கே நாம் படித்த விஷயம் எதற்கும் உதவாமல் போய்விடுமோ எனப் பயந்துகொண்டிருந்தேன். 2018-10-01 06:10:00 +0800