'வடசென்னை' குறித்த எதிர் பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில், அப்படம் தொடர்பாக வெளியாகும் தகவல்கள் ஆச்சரியம் அளிக்கின் றன. வெளியாகும் முன்பே இந்தப் படம் சீனாவின் பிங்யோ அனைத் துலகத் திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளதாம். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி உள்ளது 'வட சென்னை'. தமது வொண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தனுஷே தயாரிக்கிறார்.
இப்படம் மொத்தம் மூன்று பாகங்களாக உருவாகும் என தொடக்கத் திலேயே அறிவித்து விட்டார் வெற்றிமாறன். தற்போது முதல் பாகத்துக்கான பணிகள் முடிந்து விட்ட நிலையில், விளம்பரத்தில் கவனம் செலுத்தி வருகிறது படக்குழு. இத்தகைய சூழ்நிலையில் உலகத் திரைப்பட விழாவில் திரை யிடப்படுகிறது 'வடசென்னை'. இந்த விழா வரும் 11ஆம் தேதி துவங்கி 20ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
'வடசென்னை' படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ்.

