'பிக் பாஸ் 2'ன் வெற்றியாளராக இளம் நடிகை ரித்விகா தேர்வாகி யுள்ளார். அவருக்கு ரூ. 1.60 கோடி பரிசுத்தொகையாகக் கிடைத்தது. கடந்த ஜூன் 17ஆம் தேதி முதல் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் நேற்று முன்தினம் இறுதிச்சுற்று நடைபெற்றது. ரித்விகாவுடன் சேர்த்து ஐஸ்வர்யா, ஜனனி அய்யர், மும்தாஜ், சென்ட்றாயன், பாலாஜி, நித்யா, பொன்னம்பலம், ஷாரிக், மகத், மமதி சாரி, வைஷ்ணவி, டேனி, ரம்யா, ஆனந்த் வைத்திய நாதன், யாஷிகா ஆனந்த் ஆகிய 16 பேரும் போட்டியாளர்களாகக் களமிறங்கினர். இறுதிச்சுற்றுக்கு ரித்விகாவும் ஐஸ்வர்யாவும் தேர்வான நிலையில், இருவரையும் 'பிக் பாஸ்' வீட்டி லிருந்து வெளியே அழைத்து வந் தார் நிகழ்ச்சியை வழிநடத்திய நடிகர் கமல். பிறகு ரித்விகா வெற்றி யாளராக அறிவிக்கப்பட்டு, வெற்றிக் கிண்ணமும் பரிசும் வழங்கப்பட்டது.
பிக் பாஸ் 2: ரித்விகா வெற்றி
1 mins read
-

