இயக்குநர் பாக்யராஜால் அறிமுகப்படுத்தப் பட்டவர் சாந்தினி. மோதிரக் கையால் குட்டுப்பட்ட அதிர்ஷ்டம் வாய்த்த போதிலும், சினிமாவில் இன்னும் சாதிக்க முடியவில்லை எனும் ஏக்கம் இருப்பதாகச் சொல்கிறார். பாக்யராஜ் எட்டு ஆண்டுகளுக்கு முன் இயக்கிய படம் 'சித்து +2'. இதில் நாயகியாக அறிமுகமானார் சாந்தினி. அதன் பிறகு தமிழில் பல படங் களில் நடித்திருந்தாலும், ரசிகர்கள் தனித்துப் பாராட்டும் வகையிலான கதாபாத்திரங்கள் இன் னும் அமையவில்லை. கடைசியாக இவர் நடித்த தமிழ்ப் படங்கள் 'மன்னர் வகை யறா', 'வஞ் சகர் உலகம்'. சாந்தினி நன் றாகத் தமிழ் பேசுபவர், பிற மொழி களில் நடிக் கும்போது வசனங் களுக்கான அர்த் தத்தை முழுமை யாகத் தெரிந்து கொண்ட பிறகு நடிக்கிறார்.
"நான் பல படங்களில் நடித்திருந்தாலும், எதுவுமே பிரம்மாண்ட வெற்றியைப் பெற வில்லை. அப்படி நடக்கும் பட்சத்தில் என்னையும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள். பொறுத்திருந்து பார்ப் போம். காலம் எல்லாவற்றுக்கும் விடை தரும். அப்போது நம் காயங்களும் வலிகளும் மறைந்துபோகும்," என்று தத்துவார்த்தமாகப் பேசும் சாந்தினி திரையுலகில் தமக்கு வேறு எந்தப் பிரச்சினையும் இல்லை என்கிறார்.
பாலியல் தொல்லை, சக நடிகைகளின் பொறாமை என்பது குறித்து அதிகம் கவலைப்படவில்லை என்றும் கூறுகிறார். தம்மைப் பொறுத்தவரை கோடம்பாக்கம் நடிகைகளுக்கு மிகப் பாதுகாப்பான இடம் என்று நற்சான்றிதழ் தருகிறார். அழகாக இருப்பதன் ரகசியம்? "ரகசியம் என்று எதுவும் இல்லை. முறை யான உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு காரணமாக உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க முடிகிறது." காதல் குறித்து? "இப்போது காதல் குறித்தெல்லாம் யோசிக்கவில்லை. காதல் ரொம்ப ரொம்ப புனிதமானது. அது ஓர் உன்னதமான உணர்வு. நேரத்தைக் கடத்துவதற்காக காதலிப்பதில் உடன்பாடில்லை. காதல் என்றால் அதில் நூறு விழுக்காடு உண்மையும் அர்ப்பணிப்பும் இருக்க வேண்டும். "கல்லூரியில் படித்தபோது எனக்கும் காதல் வந்தது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக அது முறிந்துபோனது. அதன் பிறகு யாரையும் காதலிக்கத் தோன்ற வில்லை," என்கிறார் சாந்தினி.

