'இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு'

1 mins read
9ec82b59-e4c6-4e89-8b17-7db4017c856c
-

சார்மிளா மாண்ரே, ஆர்.சர்வண் தயாரிக்கும் படம் 'இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு'. இதில் விமல் கதாநாயகனாகவும், நாயகியாக ஆஷ்னா சவேரியும் நடிக்கிறார்கள். மேலும் ஆனந்த் ராஜ், சிங்கம்புலி, மன்சூர் அலிகான், லோகேஷ், வெற்றி வேல்ராஜ், ஆத்மா ஆகியோருடன் காவல்துறை அதிகாரி வேடத்தில் பூர்ணா நடிக்கிறார். ஏ.ஆர்.முகேஷ் இயக்குகிறார். மருந்துக் கடையில் வேலை பார்க்கும் விமல், சிங்கம்புலி இருவரும் சின்னச் சின்ன திருட்டுகளைச் செய்பவர்கள். குறிப்பிட்ட கடத்தல் பொருள் இவர்களிடம் இருப்பதாக நம்பும் மூன்று குழுக்கள் இவர்களைத் துரத்துகிறது. இதை நகைச்சுவை ததும்பச் சொல்லி இருக்கிறோம்," என்கிறார் இயக்குநர் முகேஷ்.