எஸ்.ஜே. சூர்யாவுக்கு ஜோடியான பவானி

எஸ்.ஜே. சூர்யாவுக்கு ஜோடியான பவானி

1 mins read
2c59e3c2-a972-4fa9-9595-fbb2b319dd07
-

கோடம்பாக்கத்தில் தன்னை மெல்ல மெல்ல நிலைநிறுத்திக்கொள்ளும் நடவடிக்கைகளைக் கச்சிதமாக மேற்கொண்டு வருகிறார் பிரியா பவானி சங்கர். 'மேயாத மான்' படம் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ள இவர் அடுத்து எஸ்.ஜே.சூர்யாவுடன் ஜோடி சேர்ந்துள்ளார். படத்தின் பெயர் 'மான்ஸ்டர்'. நெல்சன் வெங்கடேசன் இயக்கும் படம் இது. எஸ்.ஜே.சூர்யாவுக்கும் இது பிரகாசமான காலம்தான். இவர் நடிப்பில் 'நெஞ்சம் மறப்பதில்லை' விரைவில் வெளியாக உள்ளது. மேலும், 'இறவாக்காலம்', 'சர்கார்' உள்ளிட்ட சில படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். "எஸ்.ஜே. சூர்யா அற்புதமான இயக்குநர் மட்டுமல்ல, சிறந்த நடிகர் என்பதும் எல்லோருக்கும் தெரியும். அவர் அமிதாப்பச்சனுடன் 'உயர்ந்த மனிதன்' படத்தில் நடிப்பதைக் கேள்விப்பட்டு மகிழ்ச்சி அடைந்தேன். அவருடன் இணைந்து நடிப்பது நிச்சயம் நல்ல அனுபவமாக இருக்கும்," என்கிறார் பிரியா.