விண்வெளிக் கதையில் நடிக்க விரும்புகிறார் அதிதிராவ்

விண்வெளிக் கதையில் நடிக்க விரும்புகிறார் அதிதிராவ்

1 mins read
321957d0-edc2-46a9-80ab-73a7a32e17f3
-

'காற்று வெளியிடை', 'செக்கச் சிவந்த வானம்' என்று அதிதிராவ் நடித்துள்ள இரண்டு தமிழ்ப் படங்க ளிலும் அவரது நடிப்பு விமர்சகர்களால் வெகுவாகப் பாராட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் மிஷ்கின் இயக்கத் தில் உருவாகும் 'சைகோ' படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் அதிதி. இனி தமிழ், தெலுங்கு படங்களில் மட்டுமே கவனம் செலுத்துவது என முடிவு செய்துள்ளாராம். "இரு மொழிகளில் தயாராகும் படத்தில் தனுஷ் ஜோடியாக நடிக் கிறேன். வரலாற்றுக் கதைகள், காதல், திகில், விண்வெளி தொடர்பான கதைகளில் நடிக்க வேண்டும் என்பதே தமது விருப்பம் என்கிறார் அதிதிராவ்.