'சின்ன மச்சான் செவத்த மச்சான்' பாடலுக்கு வரவேற்பு

'சின்ன மச்சான் செவத்த மச்சான்' பாடலுக்கு வரவேற்பு

1 mins read
919a35ac-9b05-4fa0-9361-918bc10ec7af
-

முன்னாள் நடிகை ஜெயசித்ராவின் மகன் அம்ரீஷ் தமிழ்த் திரையுல கில் வேகமாக வளர்ந்து வரும் இசையமைப்பாளர். இவரது இசை யில் அண்மையில் வெளியான 'சின்ன மச்சான் செவத்த மச்சான்' என்ற பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இயக்குநர் ஷக்தி சிதம்பரம் கைவண்ணத்தில் உருவாகி வரும் 'சார்லி சாப்ளின்' இரண்டாம் பாகத்தில் இடம்பெற்றுள்ளது இப் பாடல். இணையத்தில் வெளியிடப் பட்ட சில தினங்களில் லட்சக் கணக்கானோர் இதைக் கேட்டு ரசித்துள்ளனர். இப்படியொரு வரவேற்பும் பாராட்டும் கிடைக்கும் என சற்றும் எதிர்பார்க்கவில்லை என வெளிப் படையாகச் சொல்கிறார் அம்ரீஷ். "பிரபு தேவா சார் எவ்வளவோ மெட்டுக்களுக்கு விதவிதமான நடனம் ஆடியிருக்கிறார். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். 'சின்ன மச்சான்' பாடலுக்கு அவர் ஆடி நான் வெற்றி பெற்றி ருக்கிறேன்.

"ராகவா லாரன்ஸ் நடித்த 'மொட்ட சிவா கெட்ட சிவா' படத்தின் மூலமாகவே சினிமாவில் எனக்கான இடம் கிடைத்தது. அதற்கு அடுத்தபடியாக பிரபுதேவா சாரின் 'சார்லி சாப்ளின்- 2' மூலம் அந்த இடம் மேலும் வலுப்பட் டுள்ளது. இதை நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது." அம்மா ஜெயசித்ரா என்ன சொல்கிறார்? "நான் பேர் சொல்லும் பிள்ளை யாக வளர வேண்டும் என்பதுதான் அம்மாவுடைய கனவு, லட்சியம் எல்லாம். அதற்கான நேரம் இப்போது கனிந்துள்ளது. இந்த மெட்டு அம்மாவையும் என்னையும் ரொம்பவே உற்சாகப்படுத்தி உள்ளது.