விஜய் பேச்சு அருமை: கஸ்தூரி பாராட்டு

விஜய் பேச்சு அருமை: கஸ்தூரி பாராட்டு

1 mins read
d301d527-37f8-42c0-a825-f894bbdfe679
-

'சர்கார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் பேச்சு மிக அருமையாக இருந்தது என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமது சமூக வலைத்தளப் பக்கத்தில், தமது இதயத்திலிருந்து வந்த வார்த்தைகளையே விஜய் பேசியிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். "விஜய்யின் பேச்சு அசத்தலாக, மிக வேகமாக இருந்தது. சினிமாவில் இடம்பெறும் அதிரடி வசனங்கள் போன்று பேசினார். "காந்தி குறித்தும் அரசியல் பற்றியும் அவர் பேசும் வரை விஜய்க்காக இந்த உரையை யாரேனும் எழுதிக் கொடுத்திருப்பார்களோ என்று யோசித்து ஆச்சரியப்பட்டேன். விஜய் இப்படி பேசுவார் என இப்படத்தைத் தயாரித்த சன் டிவி நிறுவனத்தின் நிர்வாகமே நினைத்திருக்காது," என்று கஸ்தூரி மேலும் தெரிவித்துள்ளார்.