ஜூனியர் நடிகர்களுக்கு வாய்ப்பூட்டு போட்ட ஏ.ஆர்.முருகதாஸ்

2 mins read
73193221-5806-4740-9f19-445d650bc988
-

'சர்க்கார்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், "தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று சர்காரை அமைப்பார்கள். ஆனால் நாங்கள் சர்காரை அமைத்துவிட்டு தேர்தலில் நிற்கப் போகிறோம். படத்தைச் சொன்னேன், பிடித்திருந்தால் படத்திற்கு வாக்கு போடுங்கள். தர்மம் ஜெயிக்கும், நியாயம் ஜெயிக்கும். ஆனால் தாமதமாக ஜெயிக்கும். புழுக்கம் வந்தா மழை வரும். அதுபோல் அதிக நெருக்கடி ஏற்பட்டால் ஒருத்தன் வருவான். அவன் 'லீடரா' மாறுவான். அவன் தலைவன் ஆவான். அதான் இயற்கை. அந்த இயற்கையை ஒன்றும் பண்ண முடியாது.

அவனுக்குக் கீழ் நடக்கும் சர்க்கார் வேற மாதிரி இருக்கும்," என்று அசத்தலாகப் பேசினார். அந்தப் பேச்சுத்தான் தற்பொழுது தமிழகத்தில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. இது தமிழக அரசியல்வாதிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சமூக வலைத்தளங்களிலும் விஜய்யின் பேச்சுக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளன. தீபாவளி வெளியீடு என்பதால் படக்குழுவினர் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளைத் திட்டமிட்டு வருகிறார்கள். இந்நிலையில், 'சர்கார்' படத்தில் நடித்த ஜூனியர் நடிகர்கள் பலரும் இப்படம் குறித்து பேட்டியளிக்கத் தொடங்கினார்கள். பிக்சர்ஸ்' படம் என்பதால் பெரும்பாலும் அந்நிறுவனத்தின் தொலைக்காட்சியிலேயே அனைத்தும் இடம்பெறும். பேட்டி அளித்தது தொடர்பாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில், "சர்கார் படக்குழுவினர்களின் கவனத்திற்கு... 'சர்கார்' படம் உருவாக பலரும் தங்களது கடின உழைப்பைக் கொடுத்துள்ளனர்.

இருந்தாலும் சில ஜூனியர் நடிகர்கள் பலர் பேட்டிகளைக் கொடுத்து வருகின்றனர். இது நியாயமல்ல. எதிர்காலத்தில் எங்கள் அனுமதி இல்லாமல் படம் குறித்து பேட்டி யளிப்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படும்," என்று ஏ.ஆர். முருகதாஸ் பதிவிட்டுள்ளார்.