விஜய் சேதுபதி, திரிஷா நடித்த '96' படம் நேற்று முன்தினம் காலை சிறப்புக் காட்சியுடன் வெளி யிடப்படுகிறது என்ற அறிவிப்பினால் விஜய் சேதுபதி ரசிகர்கள் படத்தின் முதல் காட்சியைக் காண முன்பதிவு செய்து ஆர்வத்தோடு வந்தவர்கள் படம் வெளியாகாததால் ஏமாற்றம் அடைந்தனர். நந்தகோபால் தயாரிப்பில், பிரேம்குமார் இயக்கத்தில் வெளியாக வேண்டிய படம் நடிகர் விஷாலால் தடைப்பட்டது. தயாரிப்பாளர் நந்தகோபால், 'கத்திச் சண்டை' படத்தைத் தயாரித்தபோது, நடிகர் விஷாலுக்கு 3 கோடி ரூபாய் சம்பள பாக்கி வைத்ததாகக் கூறப்படுகிறது. அதனால் 3 கோடி ரூபாய் பணத்தைத் தனக்கு தரும்வரை படத்தை வெளியடத் தடை விதிக்க முடிவு செய்து அதன்படி செயலாற்றி இருக்கிறார் நடிகர் விஷால். அதனை தொடர்ந்து 'ஜெமினி லேப்' திட்டமிட்டபடி திரையரங்கு களுக்கு '96' படத்தை வழங்காத காரணத்தினால் படம் வெளியாக வில்லை.
இதனிடையே முதல் காட்சி ரத்தான நிலையில் அடுத்தடுத்த காட்சிகளையாவது வெளியிட நந்தகோபால், விஜய் சேதுபதி ஆகியோர் கேகேநகர் ஜெமினி லேபில் கூடி பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்படி தனது சம்பளத்தில் இருந்து 3 கோடி ரூபாயை விஜய் சேதுபதி நடிகர் விஷாலிடம் கொடுத்து படத்தை வெளியிட உதவி செய்திருக்கிறார். விஜய் சேதுபதியின் மீது இருந்த மதிப்பு தற்பொழுது பன்மடங்காக பெருகி விட்டதாக தயாரிப்பாளர் நந்தகோபால் பார்ப்பவர்களிடம் எல்லாம் சொல்லி தன்னுடைய நன்றியைத் தெரிவித்து வருகிறார்.

