திரைத்துறைக்கான நூலகம் திறப்பு

திரைத்துறைக்கான நூலகம் திறப்பு

1 mins read
65e74bb3-9f82-4395-9e70-5c68d352e327
-

திரைத்துறையில் உள்ளவர்க ளுக்கு உதவும் வகையில், 'கூகை திரைப்பட இயக்கம்' என்ற அமைப்பைத் தொடங்கி உள்ளார் இயக்குநர் பா.ரஞ்சித். சென்னை வளசரவாக்கத்தில் நடைபெற்ற இந்த அலுவலகத் தின் திறப்பு விழாவில் இயக்குநர் கள் நாக்ராஜ் மஞ்சுளே, ராம், லெனின் பாரதி, மாரி செல்வராஜ், நடிகை குஷ்பு ஆகியோர் கலந்து கொண்டனர். திரைத்துறையில் உள்ளவர்கள் புத்தகம் வாசிக்க வேண்டும் என் பதற்காக நூலகம் ஒன்றையும் அமைத்துள்ளார் பா.ரஞ்சித். அப்போது பேசிய அவர், "புத்தகம் மூலம்தான் பலவற்றை நான் தெரிந்துகொண்டேன். உதவி இயக்குநராக இருந்த போது புத்தகங்களைத் தேடித் தேடி வாசித்தேன்.

"அப்போதுதான், உதவி இயக்குநர்களுக்கு என ஒரு நூலகம் அமைக்க வேண்டும் என்று தோன்றியது. "ஒரு படத்தைப் பார்த்தால், அதில் காட்சி வழியாக நமக்கு எல்லாம் காட்டப்பட்டுவிடும். ஆனால் புத்தகம் படித்தால்தான் அந்த எழுத்துக்கு நாம் கற்பனை செய்ய முடியும்," என்றார்.