விஜய் சேதுபதியிடம் பணம் வாங்க விஷால் மறுப்பு

விஜய் சேதுபதியிடம் பணம் வாங்க விஷால் மறுப்பு

2 mins read
78d96415-5ccd-4884-995c-33e005b54ab8
-

'96' படம் வெளியாவதில் இருந்த சிக்கலைத் தீர்ப்பதற்காக விஜய் சேதுபதி கொடுக்க முன்வந்த பணத்தை வாங்க விஷால் மறுத்து உள்ளார். விஜய் சேதுபதி, திரிஷா நடிப் பில் அண்மையில் வெளியான படம் '96'. ஆனால் இப்படத்தின் சிறப்புக் காட்சி தயாரிப்பாளர் நிதி பிரச்சினை காரணமாக ரத்தானது. இதன் தயாரிப்பாளர் மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தைச் சேர்ந்த நந்தகோபால். இதற்கு முன்னர் விஷால் நடித்த 'கத்திசண்டை' படத்தையும் இவரே தயாரித்தார். அப்படம் சரி யாக ஓடாத நிலையில், படத்தின் நாயகன் விஷால் மற்றும் ஃபைனான்சியர்களுக்கு நந்த கோபால் பணப்பாக்கி வைத்து உள்ளார்.

இந்நிலையில், '96' படத்தின் விநியோகம் மூலம் நந்தகோபா லுக்கு நல்ல லாபம் கிடைத்துள்ளது. இதையடுத்து தங்களுக்கான பணப்பாக்கியைத் திருப்பிக் கொடுத்த பிறகே '96' படத்தைத் திரையிடவேண்டும் என்று நந்த கோபாலுக்கு அழுத்தம் கொடுக் கப்பட்டதால் சிறப்புக் காட்சி ரத்தா னதாகக் கூறப்படுகிறது. இவ்வேளையில் '96' பட நாயகன் விஜய் சேதுபதி பாக்கித் தொகை மூன்று கோடியை தான் தருவதாக முன்வந்த பிறகு தான் பிரச்சினை தீர்ந்து படம் வெளி யானது. அதுமட்டுமல்லாமல் விஷா லுக்குக் கொடுக்க வேண்டிய சம் பளப் பாக்கியான 1.50 கோடி ரூபா யையும் தர விஜய் சேதுபதி ஒப்புக் கொண்டுள்ளார். இதில் விஷால்தான் நந்த கோபாலுக்கு அழுத்தம் கொடுத் ததாகவும் '96' படம் வெளியாக தடையாக இருந்ததாகவும் ஒரு சிலர் கூறினர்.

இதனால் வெறுத்துப்போன விஷால் தனக்கு விஜய் சேதுபதி தருவதாக ஒப்புக்கொண்ட ரூ.1.5 கோடியைத் தர வேண்டாம் என்று சொல்லிவிட்டார். இதற்கிடையே விஜய் சேதுபதி யின் அடுத்த படத்தில் ஷ்ருதி ஹாசன் அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.