மீண்டும் வெற்றிப் பயணம்

மீண்டும் வெற்றிப் பயணம்

1 mins read
ec4a16a3-900f-49ac-90d0-9ce81b008547
-
Google News Preferred Icon

மான்செஸ்டர்: இங்கிலிஸ் பிரி மியர் லீக் தொடரில் மான்செஸ்டர் யுனைடெட் வெற்றிப் பாதைக்குத் திரும்பியதன் மூலம் அந்த அணி யின் நிர்வாகி ஜோசே மொரின்யோ நிம்மதிப் பெரமூச்சு விட்டார். ஐந்து போட்டிகளில் தொடர் தோல்வியைச் சந்தித்த யுனை டெட் நேற்று முன்தினம் பின்னிர வில் நியூகாசலை 3=2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இதன்மூலம் யுனைடெட்டுக்கு இருந்து வந்த நெருக்கடி சற்று தளர்ந்துள்ளது.

ஆட்டம் தொடங்கிய விதத்தை பார்த்தபோது இந்தப் போட்டி யிலும் யுனைடெட் மண்ணைக் கவ்வும் சூழ்நிலை இருந்தது. அதன் ரசிகர்கள் வெறுப்பின் உச்சிக்கே சென்றுவிட்டனர். காரணம், பந்தை உதைத்து ஆட் டத்தைத் தொடங்கிய ஏழா வது நிமிடத்திலேயே நியூகாசலின் முதல் கோல் விழுந்தது. தடுப்பு அரண்களைத் தாண்டி அந்தக் கோலைப் புகுத்தியவர் கெனடி. அடுத்த மூன்று நிமிடங்களில் நியூகாசலின் இரண்டாவது கோல். ஜப்பான் நாட்டவரான யொ‌ஷி னோரி முடோ அந்த கோலைப் போட்டு வியப்பு ஏற்படுத்தினார்.