விஜய் சேதுபதியுடன் 'நானும் ரௌடிதான்', 'இமைக்கா நொடிகள்' படங்களில் நயன்தாரா நடித்திருந்தார். அதிலிருந்து இருவரும் நெருங்கிய நண்பர்களானார்கள். நயன்தாரா படம் வெளிவந்தால் படப்பிடிப்பிற்கு நடுவே படத்தைப் பார்த்துவிட்டு நயன்தாராவைத் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவிப்பார் விஜய் சேதுபதி. அதுபோல் விஜய் சேதுபதி படம் வெளிவந்ததும் தன் நண்பர்கள், காதலர் விக்னேஷ் சிவன் ஆகியோருடன் சென்று பார்த்து வருவார் நயன்தாரா. அதுபோல் '96' படம் பார்த்துவிட்டு, "பள்ளிக்கூட காலத்து காதலின் பசுமையான நினைவுகளைத் திரும்பிப் பார்க்கும் விதமாக எடுக்கப்பட்டிருப்பது தன்னைக் கவர்ந்து இருப்பதாகவும் குறிப்பாக காதலருடன் இந்தப் படத்தைப் பார்த்தது மகிழ்ச்சியாக இருந்தது," என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நண்பர்களுடன் '96' பார்க்கச் சென்ற நயன்தாரா
1 mins read
-

