தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த ரகுல் ப்ரீத் சிங், 'தீரன் அதிகாரம் ஒன்று' படம் மூலம் தமிழில் புகழ்பெற்றார். இந்தப் படத்தைத் தொடர்ந்து கார்த்தியுடன் 'தேவ்', சூர்யாவுடன் 'என் ஜி கே', சிவகார்த்திகேயனுடன் ஒரு படம் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். ரகுல் ப்ரீத் சிங்கிற்கு நடிப்புத் திறமை இருந்தும் அவர் ஏன் நாயகிக்கு முக்கியத்துவம் இல்லாமல் நாயகர்களுடன் இணைந்து மரத்தைச் சுற்றிச் சுற்றி டூயட் பாடும் கதாபாத்திரங்களைத் தேர்வு செய்கிறார் என்ற கேள்விக்கு விளக்கம் அளித்துள்ளார் ரகுல்.
"நான் நல்ல, நல்ல கதை களையே தேர்வு செய்து நடித்து வருகிறேன். ஆனால் நான் எதிர்பார்க்கும் கதாபாத்திரங்கள் எப்பொழுதுமே கிடைக்காது. அதற்காக எந்தப் படத்திலும் நடிக்காமல் என்னால் இருக்க முடியாது. அதனால் வணிக ரீதியில் வெற்றி பெறும் படங்களில் கதாநாயகர் களுடன் இணைந்து டூயட் பாடும் கதாநாயகி யாக நடிக்கிறேன். இதில் தவறு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை," என்று தெரிவித் துள்ளார். "நான் கதையைத் தேர்வு செய்வதில் மிகவும் கவனமாக உள்ளேன்.
அந்த விஷயத்தில் நான் தெளிவாகவும் உள்ளேன். அப்படி நான் பார்த்துப் பார்த்துத் தேர்வுச் செய்த கதாபாத்திரங்களால் எனக்கு நல்ல பெயர் கிடைத்துள்ளது. நான் நடிக்க வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. சூழ்நிலை சரியில்லை என்றால் நல்ல படங்கள் கூடத் தோல்வியடையும் என்பதைத் தெரிந்து கொண்டேன்," என்றார் ரகுல் ப்ரீத் சிங். க்ரிஷ் இயக்கி வரும் என்.டி.ஆரின். வாழ்க்கை வரலாற்று படத்தில் ரகுல் ப்ரீத் சிங் ஸ்ரீதேவியாக நடிப்பது உறுதியாகி யுள்ளது.

