வில்லங்கத்தில் முடிந்தது காஜல் அகர்வாலின் ஆசை

வில்லங்கத்தில் முடிந்தது காஜல் அகர்வாலின் ஆசை

1 mins read
d577ff9c-5967-465c-ba9b-50350a249928
-

காஜல் அகர்வால் மலைப் பாம்பை கழுத்தில் போட்டுக்கொண்டு வியக்கும்படி உள்ள காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. 'என்ன ஒரு அனுபவம்' என்ற தலைப்பில் அவர் வெளியிட்ட காணொளி யால்தான் அவருக்கு இப்போது பிரச்சினை ஏற்பட்டுள்ளது. குடும்பத்தாருடன் விடுமுறை யைக் கழிக்க தாய்லாந்துக்குச் சென்றுள்ள காஜல் வெளி யிட்டுள்ள காணொளியைக் கண்ட விலங்குகள் நல ஆர்வலர் கள் கோபத்தில் கொந்தளித் துள்ளனர்.

"உங்களின் செயல் விலங்குகளைக் கொடுமைப் படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது. "பீட்டா ஆதரவாளரிடம் இருந்து இப்படி ஒரு காணொ ளியை நாங்கள் எதிர்பார்க்க வில்லை. சுதந்திரமாக இருக்க வேண்டிய பாம்புகளை மனிதர் கள் பொழுதுபோக்கு பொரு ளாகப் பயன்படுத்துவது தவறு. என்ன செய்கிறோம் என்பதில் பிரபலங்கள் கவனமாக இருக்க வேண்டும்," என்று ஹைதரா பாத்தை சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் பாயல் குரானா தெரிவித்துள்ளார். முன்னதாக வெளிநாட்டு ரிசார்ட்டில் டால்பினுக்கு முத்தம் கொடுத்த புகைப்படங்களை டுவிட்டரில் வெளியிட்ட திரிஷா வும் விலங்குகள் நல ஆர்வலர் களால் விளாசப்பட்டார்.

பீட்டாவின் சர்கஸுக்கு எதிரான பிரசாரத்தைத் துவக்கியவர் காஜல். அப்படிப் பட்டவர் இப்படி பொறுப்பில்லாமல் நடந்து கொண் டிருக்கிறார் என்கிறார்கள் விலங்குகள் நல ஆர்வலர்கள்.