தெலுங்கிலும் தயாராகும் விஜய்யின் 'சர்கார்'

1 mins read
1fae1b6a-eb9d-497e-92df-3a1d6898d6a9
-

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படம் 'சர்கார்'. கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்தை வரும் தீபாவளிக்கு தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில், தெலுங்கிலும் இப்படத்தை வெளியீடு செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. தற்போது தெலுங்கு மறுபதிப்பு வேலைகள் நடந்து வருகின்றன. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும் அவரது குழுவினரும் தற்போது தெலுங்குப் பதிப்பிற்கான பாடல்கள் 'ரீரெக்கார்டிங்' வேலைகளில் மும்முரமாக இறங்கி உள்ளனர்.